ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (09:10 IST)

யார்ரா கிளப்பிவிட்டது… தமன்னா கையில் அணிந்திருந்த மோதிரம் பற்றி பரவிய வதந்தி!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்போது கவர்ச்சியான வேடங்களில் நடிக்க துவங்கியுள்ள தமன்னா, ஜெயிலர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வரும் அவர் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கையில் மிகப்பெரிய மோதிரம் ஒன்றை அணிந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். உடனடியாக சமந்தா மோதிரத்தில் இருக்கும் வைரம் உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய வைரம் என்ற வதந்தி பரவியது. இதையடுத்து அதற்கு விளக்கம் அளித்துள்ள தமன்னா, “ஒரு விளம்பரத்தின் ஷூட்டிங்கின்போது அணிந்த மோதிரம் என்றும் அது வைரம் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.