திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (16:07 IST)

மீடூ புகார் சொன்னால் வாய்ப்பு கிடைப்பதில்லை - தமன்னா பளீச்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. அண்மையில், இவரது நடிப்பில் பெட்ரோமாக்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளில் தன்னால் முடிந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். 


 
இதற்கிடையில் பாலிவுட் பக்கம் சில காலம் தலை கட்டிய தமன்னாவுக்கு அங்கு லக் அடிக்காததால் மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கே வந்துவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் மீடூ நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 
 
அதற்கு சற்றும் யோசிக்காமல் சடாலென்று பதிலளித்த தமன்னா,  மீடூ புகார் கூறும் நடிகைளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. நான் வேலை செய்த இடங்களில் இதுவரை  பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததில்லை. யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லாமல் போனது என்னுடைய அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால், பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பேசியது நல்லது. இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது தான் வருத்தமானது என  கூறினார்.