1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (14:46 IST)

தமன்னாவின் டான்ஸுக்கு அனுமதி... எனக்கு மறுப்பா?...கொந்தளித்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்  மன்சூர் அலிகான். இவர், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், பிஸ்தா, அசுரன், மின்சார கண்ணா, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், வெளியான லியோ படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

இவர் தற்போது சரக்கு என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தில் சரக்கு' படத்தின் சென்சார் கட்.. கருத்து சுதந்திரம் இல்லை என மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த  நிலையில், ‘’ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு தமன்னா ஆடுவது  ஒரு மாதிரி இல்லையா? அவரது நடனம் ஆபாசமாகவும், கேவலமாகவும் இருந்தது. தமன்னாவின்  நடனத்தை அனுமதிக்கும் சென்சார் போர்டு பொது நோக்கோடு படம் எடுக்கும் எனக்கு அனுமதி வழங்க  மறுக்கிறது’’ என்று  மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.