சிம்புவின் திருமணத்தை ஒருவழியா உறுதி செய்த டி.ராஜேந்தர்!
நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோர்களுடன் நடிகர் சிம்பு காதல் என்றும் அதன்பின் இருவருடனும் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் கோலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கள் வந்தன என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி பல நடிகைகளுடன் சிம்பு கிசுகிசுக்கப்பட்டார்.
அத்துடன் அவரது திருமண செய்தி ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் வழக்கமான ஒன்று அந்தவகையில் தற்ப்போது சிம்புவின் ரசிகர்கள் சிலர் அவரது திருமணம் குறித்து தந்தை டி.ராஜேந்தர் அவரிடம் கேட்டதற்கு,
சிம்பு தற்ப்போது நடித்துக்கொண்டிருக்கும் "ஈஸ்வரன்" படத்தின் தலைப்பிலேயே "வரன்" இருக்கிறது. எனவே கூடிய விரைவில் அதாவது 2021-ஆம் ஆண்டில் சிம்புவிற்கு நல்ல வரன் கிடைக்கும் என பதில் அளித்துள்ளார். பார்ப்போம் இதுவாவது நடக்கிறதா என்று....