செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (10:33 IST)

சிகிச்சைக்கான லண்டன் சென்ற TR இப்ப எப்படி இருக்கிறார்.… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

TR லண்டனுக்கு சிகிச்சை சென்ற நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து தேறி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவர் T ராஜேந்தர். இயக்கம், ஒளிப்பதிவு, இசை நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என பல துறைகளில் வெற்றியாளராக பவனி வந்தவர் டி ராஜேந்தர். இவரின் மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இப்போது அவர் நலமாக உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. அதை உறுதிபடுத்துவது போல தற்போது TR, தன் மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.