1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (20:32 IST)

’சயிரா நரசிம்ம ரெட்டி’: போர் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள சரித்திர திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி'. இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
 
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாகுபலிக்கு இணையாக இருப்பதாகவும், பாகுபலியை விட பிரமாண்டமாக இருப்பதாகவும் இணையதளத்தில் விமர்சனங்கள் தெறிக்க வைத்தன
 
இந்த நிலையில் இந்த படத்தின் போர் காட்சி ஒன்று பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இந்த போர்க்காட்சி தான் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்பட்டது. தற்போது இந்த போர்க்காட்சியின் டிரைலர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த டிரைலரின் ரிலீசுக்கு பின் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப் உட்பட பல இந்திய பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.