1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 20 மே 2015 (14:40 IST)

ஸ்வாதியின் திகில் படம் திரிபுரா - தமிழிலும் வெளியாகிறது

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி வாய்ப்புகள் இல்லாமல் திரையுலகைவிட்டு வெளியேறும் நிலையை மாற்றியது மலையாள சினிமா. அங்கு ஸ்வாதிக்கு தொடர்ச்சியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. மலையாள சினிமா அவரை தக்க வைத்துக் கொள்ளாமலிருந்தால் இந்நேரம் ஸ்வாதி மலையேறியிருப்பார்.
தமிழ், தெலுங்கில் அவ்வப்போது ஸ்வாதிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெலுங்கில் நாயகியை மையப்படுத்திய திரிபுரா படத்தில் ஸ்வாதி ஹீரோயின். ராஜ்கிரண் (நடிகரல்ல) இயக்கும் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிட முயற்சி நடக்கிறது.
 
தமிழில் இப்போது அதிக டிமாண்டில் இருக்கும் திகில் ஜானரில் திரிபுரா தயாராகியிருப்பதால் அதிக சிரமமில்லாமல் வியாபாரம் படியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர்.