Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீசார் வழக்கு; கைதாக வாய்ப்பு?

Sasikala| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (11:37 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  சுவாதி கொலை வழக்கு என்ற பெயரிலே ரமேஷ் செல்வன் என்ற இயக்குநர் திரைப்படம் எடுத்து டிரைலரையும் வெளியிட்டார்.

 
 
இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி டிஜிபி-யிடம் இன்று புகார்  மனு அளித்திருந்தார். இந்த வழக்கு சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மீது சென்னை மாநகர போலீசார் முறையாக சுவாதியின் தந்தையிடம் அனுமதி வாங்காதது, படத்தின் டிரைலர் வெளியிட திரைப்பட தணிக்கை துறையிடம் சான்றிதழ் பெறமால் வெளியிடுவது, வழக்கு நிலுவையில் உள்ள போது சட்ட விரோதமாக  படம் எடுத்து நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் இயக்குனர் ரமேஷ் செல்வன் மீது பதியப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :