பரணி என்ற நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான்: எஸ்.வி.சேகர் புகழாரம்!

பரணி என்ற நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான்: எஸ்.வி.சேகர் புகழாரம்!


Caston| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (18:52 IST)
நடிகர் பரணி பிக் பாஸ் வீட்டின் முக்கியமான விதியை மீறியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற நடிகர், நடிகைகளின் டார்ச்சரால் தான் பரணி நேற்று வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 
 
நடிகர் பரணியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கூடிக்கூடி பேசி அவரை தனிமைப்படுத்தினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானா பரணி சுவர் ஏறி குதிக்க முயன்றார்.
 
இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பரணி சுவர் ஏறி குதித்து தப்பித்து செல்ல முயன்றது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் டார்ச்சர் தாங்காமல் தான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 
இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பரணியை பாராட்டியுள்ளார். அதில், பிக் பாஸ் பரணி என்ற நேர்மையான ஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான். ஆசிர்வாதங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :