1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:33 IST)

அவர் சொல்வது உண்மையாயிருந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள் –சுசி கணேசன் ஆவேசம்

பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தன் மீது புகார் கூறியுள்ள லீனா மணிமேகலை சொல்வது உண்மையென்றால் என்னை இதே இடத்தில் தூக்கிலிடுங்கள் என இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான இந்தியன் மிடூ விவகாரம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதில் நம்பவே முடியாத பல இந்தி மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களின் பெயர்கள் சிக்கியுள்ளன.

அந்த வரிசையில் கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் கடந்த 2005 ஆம் ஆண்டு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் சுசி கணேசன் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘லீனா, என்னை நேர்காணல் செய்தது 2004-ல். அதையடுத்து மூன்று மாதம் கழித்து நடந்த என்னுடைய வாக்கப்பட்ட பூமி எனும் புத்தக வெளியீட்டு விழாவை அவர்தான் தொகுத்து வழங்கினார். நான் அவரிடம் தவறாக நடந்திருந்தால் எதற்காக அவர் என்னுடைய புத்தக வெளியீட்டுக்கு வர வேண்டும். அவர் எழுதிய கவிதைகளை என்னிடம் காண்பித்து அவர்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பைப் பெற்றார். என்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்ற வேண்டும் என்று அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். நான் இப்போது வாய்ப்பு ஏதும் இல்லை எனக் கூறி அனுப்பி விட்டேன்.’

‘அவர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் என்னிடம் உள்ளது, அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளேன். ஒரு பெண் சொல்லிவிட்டாள் என்பதாலேயே இந்த சமூகம் அதை உண்மை என நினைக்கிறது. இந்த சமூகம் நான் சொலவதை மண்டையில் ஏற்றிகொள்ளாது. அவர் சொல்லும் விஷயம் உண்மையென்றால் என்னை இதே இடத்திலேயே தூக்கில் போடுங்கள். ஆனால் அந்தப் பெண் சொல்வது பொய்யென்றால் அவரை ஒரு 10 நாளாவது ஜெயிலுக்கு அனுப்புங்கள். அப்போதுதான் இதுமாதிரி பெண்களுக்குப் பாடமாக அமையும்.

இந்த மிடூ சர்ச்சையில் சிக்கி உள்ளவர்களிலேயே சுசி கணேசன் தான் அதை எதிர்த்து புகார் கொடுத்துள்ளார்.