Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாழ்த்து கூறி ரகசியத்தை உடைத்த இயக்குநர்


Abimukatheesh| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (18:50 IST)
கோலிசோடா இரண்டாம் பாகம் ரசிகசியமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் ரகசியத்தை இயக்குநர் சுசீந்திரன் உடைத்துள்ளார்.

 

 
விஜய் மில்டன் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கோலிசோடா படத்தை இயக்கினார். கோலிசோடா வெற்றியை தொடர்ந்து விக்ரமை வைத்து பத்து என்றதுக்குள்ள என்ற படத்தை இயக்கினார். படம் தோல்வி அடைந்தது.
 
அதைத்தொடர்ந்து கடுகு என்ற படத்தை இயக்கினார். அதுவும் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இந்நிலையில் திரையுலகில் நீடிக்க அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் கோலிசோடா இரண்டாம் பாகத்தை ரகசியமாக எடுத்து வந்தார்.
 
கோலிசாடா இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக சில செய்திகள் வெளியானது. ஆனால் உறுதியாக படக்குழுவினர் யாரும் இரண்டாம் பாகம் குறித்து குறிப்பிடவில்லை. இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் கோலிசோடா இரண்டாம் பாகத்தை தொடங்கிய விஜய் மிலடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதன்மூலம் ரகசியமாக இருந்த கோலிசோடா இரண்டாம் பாகம் வெளியானது. மேலும் கோலிசோடா இரண்டாம் பாகம் உருவாகி வருவது உறுதியானது.


இதில் மேலும் படிக்கவும் :