வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (14:26 IST)

சூர்யா, விக்ரம் கே.குமார் படத்தின் டைட்டில் லோகோ

மாஸ் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து விக்ரம் கே.குமாரின்  படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.
 
ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு 24 என பெயர் வைத்துள்ளனர். அதன் டைட்டில் லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் அதன் பிறகு விக்ரமை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தது. சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அந்த கதையைதான் 24 என்ற பெயரில் அவர் சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறப்படுகிறது.