1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (10:39 IST)

அட்டர் ப்ளாப் கொடுத்த இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுத்த சூர்யா!

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி.

ஆனால் அவர் இயக்கிய அஞ்சான் படம் படுதோல்வி அடைந்ததாலும், அந்த படத்தை அவரே வெளியிட்டதும் மிகப்பெரிய நிதிப்பிரச்சனையில் அவரை சிக்க வைத்தது. அதே போல கமலை வைத்து அவர் தயாரித்த உத்தம வில்லன் திரைப்படமும் படுதோல்வி அடைந்ததால் மேலும் கடனில் சிக்கி படமே பண்ணமுடியாத சூழல் உருவானது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் இயக்கிய சண்டக்கோழி 2 படமும் வெற்றி பெறவில்லை. இப்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி அதில் நடிக்க அவரும் ஓகே சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.