செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (07:37 IST)

கங்குவா படத்தோடு மோதும் சூர்யா விஜய்சேதுபதியின் ‘ஃபீனிக்ஸ்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவல் படக்குழுவால் உறுதிப் படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  Phoneix (வீழான்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

டீசர் கிக்பாக்ஸிங், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மற்றும் அரசியல் கதைக்களம் என பலவற்றை உள்ளடக்க்கியதாக இருந்தது. முதல் படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் வைத்து மாஸ் ஹீரோவுக்கான பில்டப்போடு  சூர்யாவை டீசரில் காட்டியிருந்தார்கள். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசாகிறது. அதே தேதியில்தான் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.