1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (23:44 IST)

சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய சூர்யா

இந்தி சூப்பர் ஸ்டாருக்கு நடிகர்  சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.  

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்து வெளியான படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். இப்படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது இப்படம். சமீபத்தில் ஆஸ்திரேலியான் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலைக் கேட்டுத் தான் உணர்சிவசப்பட்டு கண்கலங்கியதாக இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது; தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யா. அவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்ற  கையிலே ஆகாசம் பாடலைக் கேட்டு கண் கலங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த நடிகர் சூர்யா, இதுதான் காலம்..இதுபோன்ற  பாராட்டுகள் சூரரைப் போற்று படத்திற்கு கிடைப்பதற்கு நன்றி சார் எனத் தெரிவித்துள்ளார்.