சி 3 வெற்றி.... ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா


Sugapriya Prakash| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (17:51 IST)
சி 3 படம் 6 நாளில் 100 கோடிகள் வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளனர். சூர்யாவின் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியடைய சி 3 மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பது அவருக்கு பெரும் ஆறுதல்.

 
 
இந்த வெற்றிக்கு காரணமான ஹரிக்கு டொயோட்டா ஃபார்ட்யூனர் காரை சூர்யா பரிசளித்துள்ளார்.
 
தமிழ் இன்டஸ்ட்ரியில் கார் பரிசளிப்பதை வாலி படத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் அஜித். சூர்யா பசங்க 2 படத்தின் வெற்றிக்காக பாண்டிராஜுக்கு கார் பரிசளித்திருந்தார். இப்போது ஹரிக்கு அந்த பரிசு கிடைத்திருக்கிறது.
 
ஹரி, பாண்டிராஜுக்கெல்லாம் கார் இல்லையா என்ன?

webdunia

இதில் மேலும் படிக்கவும் :