வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:30 IST)

சூர்யா மீது அதிருப்தி அடைந்த ரசிகர்கள்

நடிகர் சூர்யா மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா தெலுங்கானா கேரளா ஆகிய மாநிலங்களிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சூர்யா ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் சூர்யாவின் சமூக வலைதள பக்கங்களில் சூர்யாவின் படங்கள் குறித்த செய்திகள் சரியாக வெளிவரவில்லை என்றும் அதற்கு அந்த சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளே காரணம் என்றும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
உடனடியாக இந்த குறையை சரி செய்து சூர்யாவின் படங்கள் குறித்து அப்டேட்களை உடனுக்குடன் வெளியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்