1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:44 IST)

நீங்க ரிலீஸ் பண்ணலேன்னா நாங்களே பண்ணிக்கிறோம்– கோபத்தில் சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 


 

 
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ், சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த ஷூட்டிங், இன்னும் முடியாமல் நீண்டுகொண்டே போகிறது. எனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கூட வெளியிடாமல் பல நாட்களாக இழுத்தடித்தார் விக்னேஷ் சிவன். கடுப்பான சூர்யா ரசிகர்கள் பலவிதமான அர்ச்சனைகளைச் செய்ய, ஒருவழியாக மனமிறங்கி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
 
ஆனால், அதில் திருப்தி அடையாத சூர்யா ரசிகர்கள், அடுத்தடுத்து டீஸர், டிரெய்லர், பாடல் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடல் காட்சியைப் படமாக்கியபோது யாரோ ஒருவர் சில நிமிடங்களை மொபைலில் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார். இதனால் குஷியான சூர்யா ரசிகர்கள், ‘நீதான ரிலீஸ் பண்ண மாட்ட, நாங்களே பண்ணிக்கிறோம்’ என்று அந்த வீடியோவைப் பரப்பி வருகின்றனர்.
 
பெரும்பாலான இடங்களில் அந்த வீடியோ தடை செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும், சூர்யா ரசிகர்கள் யாரும் அந்த வீடியோவைப் பகிரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். இன்னும் சில நாட்களே ஷூட்டிங் மீதமிருப்பதால், ஷூட்டிங் முடிந்தபிறகு ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.