1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (14:55 IST)

அருண்விஜய்யின் படத்தை புரமோஷன் செய்யும் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி!

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ள திரைப்படம் பார்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது 
 
முதல் கட்டமாக பார்டர் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.09 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை சூர்யா கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகிய மூவரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அருண்விஜய்யின் திரைப்படத்தை மூன்று பிரபல நடிகர்கள் புரமோஷன் செய்வது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரம் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் அடுத்த படம் என்பதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது