Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹரியின் ராணுவ கதையில் சூர்யா


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (21:31 IST)
ஹரி இதுவரை போலீஸை வைத்துதான் படம் இயக்கி வந்தார். சிபிஐ, ரா என்று இதுவரை போனதில்லை. ஒரு அதிரடி புரமோஷனாக சூர்யாவை வைத்து ஒரு ராணுவ கதையை எடுக்க உள்ளார்.

 

 
சி 3 படம் நாய்ஸ் பொல்யூஷனாக இருந்தாலும் கல்லா நிறைகிறது. ஹரி, சூர்யா இருவருக்கும் இன்னொரு வெற்றி. இதையடுத்து விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தை ஹரி இயக்குகிறார். ஷிபு தமீன்ஸ் தயாரிப்பு. இந்தப் படம் முடிந்ததும் மீண்டும் சூர்யா, ஹரி கூட்டணி இணைகிறது.
 
ஹரி ஒரு ராணுவ கதை சொன்னார். அதில் நான் நடிக்கிறேன் என்று சூர்யா பேட்டி ஒன்றில் கூறினார். ஆக, அடுத்து ஹரி, சூர்யா இணைவது இந்தப் படத்துக்காகவே இருக்கும். அத்துடன் சிங்கம் 4 -வது பாகமும் எடுக்கப்படலாம் எனவும் சூர்யா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :