சூர்யா 45 படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 45 படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சூர்யா 45 படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என்று வெளியான அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, சூர்யா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது, அந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஆனால் நேற்று வெளியான ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு குறித்த அறிவிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் பெயர் போஸ்டரில் இடம் பெறவில்லை. இதனால், அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சூர்யா 45 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாடகரான சாய் அபயங்கர், ஏற்கனவே பென்ஸ் என்ற திரைப்படத்தில் இசையமைத்திருக்க, தற்போது சூர்யாவின் 45வது படத்தில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran