ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (17:57 IST)

இன்று நள்ளிரவு ’சூர்யா 44’ அப்டேட்.. கார்த்திக் சுப்புராஜ் அதிரடி அறிவிப்பு..!

Surya 44
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நள்ளிரவு இந்த படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரு பக்கம் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் ஊட்டி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ’சூர்யா 44’ மற்றும் கங்குவா ஆகிய இரண்டு படங்களின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் ’சூர்யா 44’ படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளன.

சூர்யா, பூஜா ஹெக்டே, சுஜித் சங்கர், ஜெயராம் ,கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வருகிறது.

Edited by Mahendran