1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (14:42 IST)

’சூர்யா 41’ படத்தின் டைட்டில் இதுவா? இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு!

Surya 41
சூர்யா நடித்து வரும் சூர்யா 41 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
சூர்யா 41 படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கும் இந்த டைட்டில் ’வணங்கான்’ அல்லது ’கடலாடி’ என்ற இரண்டு டைட்டில்கள் ஒன்றாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது