1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (11:23 IST)

இன்று மாலை சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக்! – வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத சூர்யா 40 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

இது சூர்யாவின் 40வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படாததால் சூர்யா 40 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. அதையொட்டி ஆர்வமுடன் காத்துள்ள ரசிகர்கள் சூர்யா 40 குறித்த ஹேஷ்டேகுகளை இப்போதே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.