1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (15:25 IST)

சிந்தனைத் தூண்டும் கருத்தும், பொழுதுபோக்கும் இருக்கும்… வேட்டையன் படத்தைப் ப்ரமோட் செய்த சூர்யா!

ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையிலேயே சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் விஜய் வேட்டையன் படத்தைப் பார்த்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா வேட்டையன் திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் “வேட்டையன் படத்துக்கு வாழ்த்துகள். படம் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களோடும் இருக்கும் என நம்புகிறேன். தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள அமிதாப் பச்சன் அவர்களுக்கு வாழ்த்துகள்.  ரஜினி சாருக்கு வாழ்த்துகள்.  இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.