வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (14:30 IST)

மணிரத்னத்தின் புதிய படத்தில் சூர்யா?

மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதீதி ராவ், டயானா எரப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்க்கு வைரமுத்து பாடல்கள் எழதி ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பல ஹீரோக்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு வரவேற்பு ரசிகர்களிடையே  அதிகமாக உள்ளது.
 
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சூர்யா வந்து படக்குழுவினருடன் எடுத்துக் கொண்டு போட்டோ வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தில் சூர்யா நடித்திருப்பாரா அல்லது தனது மனைவியை சந்திக்க வந்திருப்பாரா என்று பல கேள்விகள் எழுகிறது. ஒரு வேளை கெஸ்ட் ரோலில் நடித்திருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது. ஆனால் டிரைலரில் சூர்யா இருப்பது போல் எந்த ஒரு காட்சியும் இல்லை. இதற்கான விடை படம் வெளிவந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள  முடியும். எனவே படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.