புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (08:28 IST)

கஜினி 2 மூலமாக இணைகிறார்களா அமீர்கானும் சூர்யாவும்?

நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா காம்பினேஷனில் இந்த படம் உருவானது. படம் வெளியான போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக சூர்யா, அசின் ஜோடியின் காதல் காட்சிகளும் படத்தின் பாடல்களும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

கஜினி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. பாலிவுட்டில் முதல் முதலில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற சாதனையை கஜினி நிகழ்த்தியது. இதையடுத்து கஜினி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஏ ஆர் முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கஜினி 2 எடுக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அதுபற்றி பேசியுள்ள சூர்யா “கஜினி 2 திரைப்படத்தில் நானும் அமீர்கானும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது” எனக் கூறி பரபரப்பை எகிறவைத்துள்ளார். கஜினி 2 தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாகவும் அதில் அமீர்கான் தமிழ் பதிப்பில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.