சூர்யா படத்தில் நடிக்கும் சத்யன்
சூர்யாவின் உறவினரான நடிகர் சத்யன் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார்.
சிவகுமார் குடும்பத்திற்கு சொந்தக்காரர் என்றாலும் சத்யன் சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களில் அதிகம் இடம்பெற்றதில்லை. விஜய் படங்களில்தான் சத்யனை அதிகம் பார்க்க முடியும்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சத்யன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி, நடிப்பிலிருந்து விலகியிருக்கும் செந்தில், சுரேஷ் மேனன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.