எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார் சுரேஷ் சக்ரவர்த்தி? காரணம் இது தான்..!!
பிக்பாஸ் வீட்டில் இந்த வராம் எவிக்ஷனில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் சுரேஷ் மிகச்சிறந்த வகையில் பெர்பார்ம் செய்து வந்தார். வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரையும் கொளுத்தி போட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார்.
ஆனால், அர்ச்சனா வந்த பிறகு சுரேஷ் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். பெரிதாக சொல்லிக்கொள்ளுபடி ஒன்று செய்யவில்லை. இதனால் அவரது பங்கும், ஈடுபாடும் குறைவாக இருப்பதால் நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்திற்கு தேவையில்லதாக நபராக தெரிகிறார்.
அத்துடன் பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு தான் குறைவான வாக்குகள் வந்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதனால் அவர் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இருந்தும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.