Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரை நிர்வாண போட்டோவை காட்டிய இயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த பிரபல நடிகை


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (20:01 IST)
பிரபல மலையாள நடிகை சுரபி, தன்னிடம் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குநருக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

 


 
மின்னாமினுங்கு படத்திற்காக சிறந்த நடிகை என தேசிய விருது பெற்றவர் நடிகை சுரபி லட்சுமி. அண்மையில் பிரபல நடிகை பார்வதி மேனன், மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று கூறினார்.
 
இதுகுறித்து நடிகை சுரபி லட்சுமி கூறியதாவது:-
 
பட வாய்ப்புக்காக இயக்குநர்கள், நடிகர்கள்; நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நான் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. 
 
இயக்குநர் ஒருவர் நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை காண்பித்து இதுபோன்ற உடையை நீங்கள் எப்பொழுது அணிந்து நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தேன். உங்களின் மகளுக்கு 18 வயது தானே ஆகிறது. புகைப்படத்தில் இருக்கும் உடை என்னை விட உங்கள் மகள் அணிந்தால் நன்றாக இருக்கும் என அந்த இயக்குநரிடம் கூறினேன், என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :