1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:42 IST)

சூப்பர் ஸ்டார் மோகன்லால் பட 'டைட்டில் சாங்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கியுள்ள ப்ரோடாடி திரைப்படத்தின் டைட்டில் பாடல் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று  ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட  பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். குறுகிய கால படமாக உருவான இந்த படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.

நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது. நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

 இ ந் நிலையில் ப்ரோ டாடி படம் வரும் 20 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகும் என சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்.