வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (22:57 IST)

சூப்பர் ஸ்டார் படத்தின் புகைப்படம் செம வைரல்....ரசிகர்கள் மகிழ்ச்சி

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவரது நடிப்பில் த்ரிஷயம் 2 படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.
 

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விரைவில் கமல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷயம் 2 படம் தெலுங்கில் ரிமேக் ஆகவுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் – மீனா நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் சமீபத்தில் நடிகை பூர்ணா இணைந்துள்ளார்.இவர் வழக்கறிஞராக நடிக்கவுள்ளார்.

மேலும் த்ரிஷ்யம் 1 பாகத்தை தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியா தற்போது தேர்தல் வேலைகளில் இருப்பதால் இப்படத்தை ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை இணைந்துள்ளார்.

இப்பட்த்தின் போலீஸ் அதிகாரி வேடத்தில் 80 களின் முன்னனி நடிகையாகத் திகழ்ந்த நதியா நடிக்கவுள்ளார். இவரும் மீனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.