வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2016 (11:40 IST)

விஜய் படத்தை நழுவ விட்ட சன்னி லியோன்!!

ஜெய் மற்றும் ஸ்வாதி ஆகியோர் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனம் ஆடினார். 

 
அதே போன்று பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் பலர் நடித்து வரும் பைரவா படத்திலும் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு வந்ததாம். 
 
ஆனால், அதற்கு சம்பளமாக ரூ.1 கோடி சம்பலம் கேட்டுள்ளார் சன்னி லியோன். இதன் காரணமாக இதற்குப் பதிலாக மாற்று நடவடிக்கையை படக்குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். 
 
விஜய்யின் பைரவா படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.