வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2017 (12:31 IST)

படப்பிடிப்பில் பாம்பை கண்டு பதறி ஓடிய சன்னிலியோன்: வீடியோ

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார். இந்த நிலையில் அவரை பாலிவுட் படக்குழுவினர்களில் ஒருவர் படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் பொம்மை பாம்பை காட்டி பயமுறுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் படப்பிடிப்புக்கான வசனத்தை சன்னிலியோன் படித்து கொண்டிருக்கின்றார். அப்போது படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் பொம்மை பாம்பை திடீரென ஒருவர் சன்னிலியோன் மீது ஒருவர் போடுகிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த சன்னிலியோன், பதறியடித்து நாற்காலியில் இருந்து எழுந்து ஓட்டம் பிடிக்கின்றார். பாம்பை போட்ட நபரும் ஓடுகிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.