1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூன் 2018 (10:10 IST)

குடி போதையில் கார் விபத்து: நடிகை விளக்கம்

விஜய் டிவி சுனிதா மீது குடிபோதையில் கார் ஓட்டியதற்கான புகார் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியின்  நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சுனிதா. இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தபோது, இவரது கார் விபத்துக்குள்ளானது.
 
சுனிதா குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என அப்பகுதி மக்கள், சுனிதாவின் காரை சூழ்ந்து கொண்டு அவரிடன் தராறு செய்தனர். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலானது.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுனிதா, நான் குடித்துவிட்டு காரை ஓட்டவில்லை. முதலில் எனக்கு காரே ஓட்டத் தெரியாது. என்னிடம் லைசென்ஸ் கூட இல்லை. என்னுடைய டிரைவர்தான் காரை ஓட்டிவந்தார். நான் காரின் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
விபத்து ஏற்பட்ட உடனே அங்கு திரண்ட பொதுமக்கள் என்னை தரக்குறைவாகப் பேசினர். அங்கிருந்தவர்கள் புகைப்படம், வீடியோக்களை எடுக்க ஆரம்பித்தனர். நான் காரை ஓட்டவில்லை என எவ்வளவு கூறியும், அங்கிருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றேன். இந்த விபத்து குறித்து சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுனிதா தெரிவித்தார்.