திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:55 IST)

சுல்தான் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!

சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன. ஆனால் சுல்தான் வெற்றி திரைப்படம்தான் என்று தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் வரும் 30 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும், தெலுங்கில் ஆஹா தளத்திலும் ரிலீஸாக உள்ளது.