செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:10 IST)

5 நாட்களில் 30 கோடி வசூல்… சுல்தான் தயாரிப்பாளர் அறிவிப்பு!

நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் 5 நாளில் ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘சுல்தான் திரைப்படம் இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் 19 கோடி ரூபாயும், ஆந்திராவில் 5 கோடியும் அதிகபட்சமாக வசூல் செய்துள்ளது’ என்று கூறியுள்ளார். மாஸ்டருக்கு பின் ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்த்த படமாக சுல்தான் மாறியுள்ளது.