திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:21 IST)

புதிய ஆடி காரில் நண்பர்களோடு ஜாலி ரெய்ட்… சுதா கொங்கராவின் மகிழ்ச்சி தருணம்!

இயக்குனர் சுதா கொங்கரா தான் வாங்கியுள்ள புதிய ஆடி காரில் சூர்யா, ஜி வி பிரகாஷ் ஆகியோருடன் பயணம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் 6 தேசிய விருதுகளைப் பெற்றது. சூர்யா உள்பட படக்குழுவினர் பலருக்கு விருதுகள் கிடைத்தன.

இந்த படத்தை இப்போது இந்தியில் இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. இந்நிலையில் புதிதாக ஆடி கார் வாங்கியுள்ள அவர் தனது நெருங்கிய நண்பர்களான சூர்யா, மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோரோடு காரில் உலா வந்துள்ளார். மேலும் இயக்குனர் மணிரத்னத்தையும் சந்தித்து செல்பி எடுத்துப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.