செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (13:47 IST)

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா கூறியது என்ன?

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து தனுஷின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா என்ன கூறினார் என்பது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
18 ஆண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திடீரென ஒருவரை ஒருவர் பிரிவதாக சமீபத்தில் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தனர் 
 
இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணிய சிவா அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.
 
அதற்கு பதில்  கூறிய சுப்பிரமணிய சிவா, ‘இது அவரவர் தனிப்பட்ட சம்பந்தப்பட்ட விஷயம் இதில் மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை. எனவே அது குறித்து நான் எந்தவித கருத்தையும் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார்