வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 23 ஜூன் 2014 (12:25 IST)

முருகன் கோயில் பின்னணியில் தயாரான கார்த்திகேயன்

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடிப்பில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வடகறி வெளியாகியுள்ளது. சுப்பிரமணியபுரத்தில் நடித்த அதே ஜெய்தான் நாயகன். அந்தப் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ஸ்வாதிக்கு.
 
அடுத்து இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகவிருக்கும் படம், கார்த்திகேயன். கார்த்திகேயன் முருக கடவுளின் பெயர்களில் ஒன்று. படமும் முருகன் கோயிலை மையப்படுத்தியது.
 
நீண்ட காலமாக முருகன் கோயில் ஒன்று பூட்டிக் கிடக்கிறது. அது ஏன் அப்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டி பாழடைந்து கிடக்கிறது? ஊரில் உள்ள யாருக்கும் பதில் தெரியவில்லை, கோயிலை திறக்கவும் முடியவில்லை. இந்நிலையில் படத்தின் நாயகன் நிகில் (நகுல் அல்ல) கோயிலை திறக்க முயற்சி செய்கிறார். அது பல்வேறு பிரச்சனைகளுக்குள் அவரை கொண்டு சேர்க்கிறது. மெதுவாக கோயில் பூட்டிக் கிடப்பதற்கான மர்ம முடிச்சும் அவிழத் தொடங்குகிறது.
 
கோயிலை பின்னணியாக வைத்து அருமையான கமர்ஷியல் ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சந்து எம்.சேகர். சந்திரா இசையமைக்க, கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ளது. ஸ்வாதிக்கு ஹீரோயின் என்பதற்கு மேலான வேடம்.
 
படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்ததால் படம் விரைவில் திரைக்கு வருகிறது.