திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (10:59 IST)

சிம்புவின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கன்னட திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’முஃப்தி’ என்ற திரைப் படத்தின் ரீமேக்கில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ஆரி நடித்த ‘நெடுஞ்சாலை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் டைட்டில் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெகு விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது
 
சிம்பு ஏற்கனவே நடித்து முடித்துள்ள ’ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படமும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ’முஃப்தி’ மேக்கின் திரைப்படம் தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு சிம்பு ரசிகர்களுக்கு மூன்று விருந்துகள் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது