புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (19:22 IST)

இந்த குழந்தைக்கு உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை - மிரட்டிய நகுல் மனைவி!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.
 
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து நடிகர் நகுலுக்கு அகிரா அழகிய பெண் குழந்தை பிறந்தது. சமீப நாட்களாக தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஸ்ருதி பெயரில் இன்ஸ்டா fake அக்கவுண்ட் ஒன்றில் அகிராவின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்ருதி,  நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு புரிகிறது.ஆனால், உங்களுக்கு சம்மந்தமே இல்லாத பெயரில் இப்படி அக்கவுன்ட் ஆரம்பிப்பது தவறு. இதனால் நீங்கள் ஜெயிலுக்கு போவீர்கள். நேற்றிலிருந்து இதை நீக்க இந்த பேஜ்ஜை தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. இந்த பக்கத்தை புகார் அளியுங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.