செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (12:55 IST)

ஸ்ருதி அற்புதமான நடிகை – புகழும் பாலிவுட் நடிகர்

ஸ்ருதி அற்புதமான நடிகை  எனப் புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகரான ராஜ்குமார் ராவ்.




ராஜ்குமார் ராவ், ஸ்ருதி ஜோடியாக நடித்த ‘பெஹன் கோஹி டெரி’ என்ற பாலிவுட் படம், இன்று ரிலீஸாகிறது. இவர்கள் இணையும் முதல் படம் இது. “ஸ்ருதி அற்புதமான நடிகை. ஸ்கிரீனில் பார்க்கும்போது அழகு தேவதையாகத் தெரிகிறார். தன்னுடைய வேலையில் கமிட்டடாக இருக்கும் பெண். எங்கள் இருவருக்குமான ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது” என ஸ்ருதியைப் புகழ்ந்துள்ளார் ராஜ்குமார் ராவ்.

ஸ்ருதிக்கு மட்டுமல்ல, கமலுக்கும் இவர் மிகப்பெரிய ரசிகராம். கமலை லெஜண்ட் எனக் குறிப்பிடும் ராஜ்குமார் ராவ், எப்போதுமே அவர் இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியுள்ளார். கமல் நடித்த பல படங்களைப் பார்த்திருந்தாலும், குள்ளனாக நடித்த ‘அப்பு’ கேரக்டர் தான் தனக்கு மிகவும் பிடித்தது எனத் தெரிவித்துள்ளார். கமலைச் சந்தித்து சினிமா பற்றிப் பேசவேண்டும் என்பது அவர் ஆசையாம். அந்த ஆசையை ஸ்ருதியிடம் சொல்ல, அவரும் நிறைவேற்றுகிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளாராம்.