Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட வாய்ப்பு இல்லாததால் லண்டனுக்குச் செல்லும் ஸ்ருதி..


Cauvery Manickam (Murugan)| Last Modified புதன், 14 ஜூன் 2017 (13:49 IST)
பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், லண்டனுக்கு செல்கிறார் ஸ்ருதி ஹாசன்.

 

 
ஸ்ருதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான பாலிவுட் படம் ‘பெஹன் கோஹி டெரி’. இந்தப் படத்தை, தன்னுடைய தந்தை கமல் மற்றும் பள்ளி நண்பர்களுக்காக, சென்னையில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து திரையிட்டார் ஸ்ருதி. படத்தைப் பார்த்த பின்னர், ஸ்ருதியிடம் நீண்ட நேரம் பேசினாராம் கமல்.
 
“அவர் எனக்கு அப்பா மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட. சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்க்கையிலும் சரி… அவருடைய அட்வைஸ் எனக்கு உதவியாக இருக்கும். என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது, சந்தோஷத்தைத் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ருதி. அடுத்ததாக, படங்கள் எதுவும் இல்லாத ஸ்ருதி, லண்டனுக்குச் சென்று தன் குழுவினர் உருவாக்கி வரும் ஆல்பத்தின் பணிகளைக் கவனிக்க இருக்கிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :