Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காயத்ரியை பழிவாங்க முதல்ல ஷக்தியை தூக்கனும்: ஸ்ரீபிரியா ஐடியா இது!

காயத்ரியை பழிவாங்க முதல்ல ஷக்தியை தூக்கனும்: ஸ்ரீபிரியா ஐடியா இது!


Caston| Last Updated: புதன், 9 ஆகஸ்ட் 2017 (15:41 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மன அழுத்தம் காரணமாக வெளியேறிய ஓவியாவுக்கு மக்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பலத்த ஆதரவு உள்ளது. ஓவியா வெளியேறியதால் அவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

 
 
குறிப்பாக காயத்ரி ரகுராம், ஜூலி மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஜூலி வெளியேறிய போது அவரை ரசிகர்கள் யாரும் எதுவும் செய்யாதீர்கள் என கமல்ஹாசன் வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு உள்ளது நிலமை. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள காயத்ரி ரகுராமை பழிவாங்க நடிகை ஸ்ரீபிரியா ஐடியா ஒன்றை டுவிட்டரில் கூறியுள்ளார்.
 
பிக் பாஸ் வீட்டில் பரணி மற்றும் ஓவியா புறக்கணிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டதே அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தாங்களாகவே வெளியேற காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தனிமையை காயத்ரி உணர வேண்டும் என ஸ்ரீபிரியா கூறுகிறார்.

 
ஸ்ரீபிரியா தனது டுவிட்டரில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சக்தி கிளம்பவேண்டும் காயத்ரி அங்கேயே இருந்து தனியாக கிடந்து தவிக்க வேண்டும். எப்படி என்னுடைய திட்டம் என கேட்டுள்ளார். காயத்ரி எப்பொழுதும் ஷக்தியுடனே பேசிக்கொண்டு இருப்பார். இருவரும் சேர்ந்து புறம் பேசுவதே வழக்கம். ஷக்தி இல்லை என்றால் காயத்ரி இல்லை என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களே சொல்கிறார்கள். இந்த ஆயுதத்தை தான் தற்போது கையிலெடுக்க சொல்கிறார் ஸ்ரீபிரியா.


இதில் மேலும் படிக்கவும் :