1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (21:01 IST)

தொலைஞ்சு போங்கடா. வெறுப்பில் டுவீட் செய்த ஸ்ரீப்ரியா

சிவாஜி, கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய திறமையும் உள்ளவர். சமீபத்தில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் டாக் ஷோ உள்பட பல கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வருபவர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் பதிவு செய்த ஒரு கருத்து சர்ச்சைக்குரியதாகி உள்ளது. ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் 'திறமைசாலிகள் மற்றும் அனுபவசாலிகள் கவுரவிக்கப்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை? அதிகாரம் படைத்தவர்களுக்கு இது தெரியாதா? அல்லது அறிவுரையாளர்களுக்கு அவர்கள் செய்வது தெரியாதா? தொலஞ்சி போங்கடா என்று கூறியுள்ளார்.

ஸ்ரீப்ரியா யாரை மனதில் வைத்து இதை பதிவு செய்தாரோ தெரியவில்லை. ஆனால் இதற்கும் ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியத்தையும் (?) முடிச்சுபோட்டு ஒருசில இணையதளங்களில் செய்தி வெளியானது.



 

இதனால் மீண்டும் ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் ஐஸ்வர்யா தனுஷ் என்றுஎந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. வேண்டுமென்றே கற்பனையாக நான் கூறாதவற்றை சில இணையதளங்கள் செய்தியாக வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். எம்.எஸ்.வி, நாகேஷ் போன்ற திறமையானவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற அர்த்தத்தில்தான் நான் அந்த டுவிட்டை பதிவு செய்தேன். வேறு யாரையும் குறிப்பிட்டவில்லை 'என்று கூறியுள்ளார்.