வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (13:04 IST)

என் மனைவி பெயருக்கு களங்கம் என்றால் எந்த விலை கொடுத்தும் தடுப்பேன்

என் மனைவி ஸ்ரீதேவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றால் எந்த எல்லைக்கும் சென்று தடுப்பேன் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக கூறினார்.
மாணவன் ஆசிரியை மீது காமம் கொள்ளும் சர்ச்சைக்குரிய படத்துக்கு ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவி என்று பெயர் வைத்தார். என்னுடைய பெயரில் ஆபாசப் படமா என்று நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மூலம் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், படத்தின் பெயரை மாற்ற வர்மா மறுத்துவிட்டார். ஸ்ரீதேவியின் ரசிகன் நான். ஆனால் இந்தப் படத்துக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. சாவித்திரி என்ற பெருக்கு அனுமதி கிடைக்காததால்தான் ஸ்ரீதேவி என்று பெயரை மாற்றினேன் என்றார்.
 
வர்மாவின் பேச்சு போனி கபூரை ஆவேசப்படுத்தியது. வர்மா இரண்டு விதமாகப் பேசுகிறார். ஸ்ரீதேவியின் ரசிகர் என்று சொல்லிக் கொண்டே தவறான படத்துக்கு ஸ்ரீதேவியின் பெயரை வைப்பது எப்படி சரியாகும்? என் மனைவியின் பெருக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்தால் எந்த எல்லைக்கு சென்றும் தடுப்பேன் என்றார்.
 
வர்மாவின் பிடிவாதத்தால் படத்தின் தலைப்புப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.