1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (17:07 IST)

என் அறைக்கு வர விரும்புகிறாயா வாராகி? - போட்டுத் தாக்கிய ஸ்ரீரெட்டி

தன் மீது அவதூறாக புகார் தெரிவிக்க நடிகர் வாராகிக்கு எந்த தகுதியும் இல்லை என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.   
 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறையிடவும் அவர் முயன்று வருகிறார்.  
 
ஆனால், ஸ்ரீரெட்டி திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் நடிகரும், இயக்குனருமான வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது ஸ்ரீரெட்டிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவருக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் “வாராகி இன்றைக்கு உன் கன்னத்தில் அறையப்போகிறேன்.. அதற்கு நீ தகுதியானவன்தான்” என குறிப்பிட்டிருந்தார். 

 
இந்நிலையில், வாராகி மீது புகார் கொடுப்பதற்காக இன்று அவர் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் வாராகியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
என்னை விபச்சாரி என வாராகி விமர்சித்துள்ளார். அவர் யார் என்று கூட எனக்கு தெரியவில்லை. என் விவகாரத்தில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. என்னை விமர்சிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. என் இருப்பிடத்தை அவர் பேசியிருக்கிறார். அவர் என்னுடைக்கு அறைக்கு வர விரும்புகிறார? நான் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டபோது யாரிடமும் பணம் பெறவில்லை. வாய்ப்புகாகத்தான் அதை செய்தேன். அப்படியெனில், பணத்தை வாராகி கொடுத்தாரா? பெண்களை அவதூறாக பேசியதன் மூலம் சினிமாத்துறையில் நடிகைகளை எப்படி மதிப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளார். அந்த வகையில் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன். 
 
அவர் நடிகர் சங்க தேர்தலில் நிற்க போவதாய் கேள்விப்பட்டேன். சங்கத்தில் இருக்கும் பெண்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள். யாரும் அவருக்கு வாக்களிக்காதீர்கள்” என அவர் காட்டமாக பேசினார்.