திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (12:28 IST)

பிரபல ’ லேடி சூப்பர் ஸ்டார் ’ மீண்டும் தமிழ் சினிமாவில் ...

90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் கலக்கியவர் நக்மா. ஆனால் திடீரென்று சினிமாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
நான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன் . நான் நடித்த படங்களில் காதலன், மற்றும் பாட்ஷா ஆகியவை தெலுங்கு மொழியில் வெளியானது. என் நடிபையும். நடனத்தையும் பாராட்டினார்கள் ரசிகர்கள். அதனால் எனக்கு சினிமாவில் நல்ல பெயர் இருந்தது. 
 
2002 ஆம் ஆண்டில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மாவாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 ஆம் ஆண்டு வரை போஜ்பூரி, பெங்காலி படங்களில் நடித்தேன்.  அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவை விட்டு விலகியிருந்தேன். ஆனால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
 
இப்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதில் ஒருபடத்தில் அர்ஜூனுக்கு அம்மா கேரக்டரில் நடிக்க உள்ளேன். இதை திரி விக்கிரம் இயக்க உள்ளார். தமிழ், கன்னட மொழிகளிலும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க  ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு தெர்வித்தார்.