பள்ளி மாணவனை செளந்தர்யா ரஜினிகாந்த் பாராட்டியது ஏன் தெரியுமா?


sivalingam| Last Modified புதன், 12 ஜூலை 2017 (22:24 IST)
தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் 'விஐபி 2' படத்தை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் விறுவிறுப்பாக உள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் புரமோஷன் பணியிலும் அவர் கவனம் செலுத்தி வருகின்றார்


 
 
இந்த நிலையில் பள்ளிச்சிறுவன் ஒருவன், தனுஷின் 'விஐபி 2' பட ஸ்டில் ஒன்றை பென்சிலால் வரைந்து அதில் கலர் பென்சிலால் கலரடித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஷர்வின் என்ற அந்த சிறுவனுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சிறிய வயதிலேயே அவர் ஓவியக்கலையில் தேர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அந்த சிறுவன் தனுஷின் ரசிகன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (தனுஷூக்கு சிறுவர்கள் மட்டுமே ரசிகர்களாக இருக்கின்றனர் என்பது வேறு விஷயம்). தனுஷ் ஓவியத்தை வரைந்த சிறுவனுக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :